அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா
அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டத்தை செயற்படுத்துவதற்காக, ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மூன்று திரவ இயற்கை எரிவாயு மின்திட்டங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
சிறிலங்கா- சீனா இடையிலான உறவுகளைச் சீர்குலைக்க சில குறிப்பிட்ட வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில், மிகப்பெரிய ஆடம்பர வணிக வளாகம் ஒன்றைக் கட்டும் பணிகளை சிறிலங்காவும், சீனாவும் இணைந்து நேற்று ஆரம்பித்துள்ளன.
அனைத்துலக நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா மற்றும் ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் Tiangong-1 விண்வெளி நிலையம் இன்று அல்லது நாளை பூமியின் மீது விழலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனால் சிறிலங்காவுக்கு ஆபத்து இல்லை என்று ஆர்தர் சி கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று முன்தினம் அதிகாலையில் சீனாவுக்குப் பயணமாகியுள்ளார்.
சிறிலங்காவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு, ஒன்பது நாட்கள் பயணமாக இன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளது.
சிறிலங்காவின் தெற்கிலுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது ஆட்கள் நடமாட்டமில்லாத பாலைவனமாகக் காட்சியளிக்கின்றது. கடந்த மாத நடுப்பகுதியில் ஒரு நாள் பிற்பகல் இதன் வாயிலுள்ள தேநீர்ச் சாலையில் நின்ற போது ஒரு சில வாகனங்களை மட்டுமே காணமுடிந்தது.