சிங்கப்பூர் சென்றார் ரணில் – பொருளாதார முதலீடுகளை பெறுவதே திட்டம்
இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின் போது, அவர் சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் அவர் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார்.

