மேலும்

Tag Archives: ஐதேக

தமிழில் தேசிய கீதம் பாடியதால் தான் ஐதேகவுக்கு தோல்வியாம் – திலக் மாரப்பன கண்டுபிடிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டமைக்கு சுதந்திர நாளன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதே முக்கிய காரணம் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

ஆதரவை விலக்கினால் சவாலை எதிர்கொள்வோம் – ஐதேக

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்காவிடின், அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி விடுத்துள்ள சவாலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

மைத்திரியுடன் நிபந்தனையுடன் பேசத் தயாராகிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், நிபந்தனையுடனான பேச்சுக்களை நடத்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தயாராகி வருகிறார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரவி கருணாநாயக்க பதவி விலகாவிடின் நீக்குவதற்கு நடவடிக்கை

ரவி கருணாநாயக்கவின் உபதலைவர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க விலகாவிடின், அவரைப் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐதேகவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களிடம் மன்றாடுகிறார் மகிந்த

தன் மீது தமிழர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தலுக்குப் பின் நாடு திரும்பும் கோத்தாவைக் கைது செய்ய ஏற்பாடு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐதேக பிரதி அமைச்சர் மீதும் ஆணைக்குழு குற்றச்சாட்டு

ஐதேகவைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராகவும், விசாரணைகளை நடத்த சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

கூட்டு அரசாங்கத்தை நீடிக்கும் கடிதம் கிடைக்கவில்லை – சபாநாயகர்

கூட்டு அரசாங்கம் தொடர்பான உடன்பாடு நீடிக்கப்படுவது தொடர்பான எந்த கடிதமும் தமக்குக் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நிதி அதிகாரங்களை ஐதேகவிடம் இருந்து பறிக்கிறார் மைத்திரி

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஐதேகவினால் கையாளப்பட்டு வந்த தேசிய பொருளாதாரத்தை, தம்வசம் எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கு எதிராக வாய் திறக்கக் கூடாது – ஐதேகவினருக்கு ரணில் கட்டளை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக, இனிமேல் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்று, ஐதேக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.