அரசதரப்புக்குப் தாவமாட்டோம் – திஸ்ஸ உள்ளிட்ட 3 ஐதேக பிரமுகர்களும் அறிவிப்பு
ஆளும்கட்சியில் தாம் இணைந்து கொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க மறுத்துள்ளார்.
ஆளும்கட்சியில் தாம் இணைந்து கொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க மறுத்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக நிறுத்தும் எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பாரிய கட்சித் தாவல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சுமார் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் தேர்தலில் எதிரணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான பெருமாள் இராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
சிறிலங்காவின் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு, நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.