கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவுக்கு இல்லை – சிறிலங்கா திட்டவட்டம்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் எந்த நாட்டுக்கும் வழங்கப்படாது என்று சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் எந்த நாட்டுக்கும் வழங்கப்படாது என்று சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரம் அளித்துள்ளது.
சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் இந்தியப் புலனாய்வு அமைப்பான றோ தொடர்புபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து- நேற்றுமாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டு, பேசியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பூகோள பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதாகவும், இதனை எதிர்கொள்வதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரும், பிரதமரும், ஒரே நேரத்தில் வெளிநாடு சென்றிருந்ததால், கடந்தவாரம் ஒரு நாள் முழுவதும், சிறிலங்காவில் 20 மில்லியன் மக்களுக்குப் பொறுப்பேற்கும் நிலையில் எவரும் இருக்கவில்லை என்று கொழும்பு ஆங்கில ஏடு ஒன்று தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலரி மாளிகையில் நேற்று ஆரம்பமான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘எமது எதிர்காலத்தை வரையறை செய்யும் இந்தியப் பெருங்கடல்’ என்ற தொனிப்பொருளில் மூன்று நாள் மாநாடு, அலரி மாளிகையில் உள்ள சிறிலங்கா பிரதமரின் செயலகத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.
கொழும்பில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள இந்தியப் பெருங்கடல் தொடர்பான கருத்தரங்கில், இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.