மேலும்

Tag Archives: இந்தியா

இந்தியாவைப் பகைத்ததால் விளைவுகளை அனுபவிக்கிறோம் – மகிந்த அமரவீர

முன்னைய அரசாங்கம் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால், தற்போதைய அரசாங்கம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர.

அமெரிக்காவின் பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி – சிறிலங்கா கடற்படைக்கு முதல்முறையாக அழைப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கா நடத்தி வரும் பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.

மூன்று எரிவாயு மின் திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி

மூன்று திரவ இயற்கை எரிவாயு மின்திட்டங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

சீனாவின் நெருக்கத்தால் சிறிலங்கா – இந்திய உறவுகளில் பாதிப்பு – விக்னேஸ்வரன்

இந்திய- சிறிலங்கா உறவுகள் முன்னரைப் போன்று நெருக்கமாக இல்லை என்றும், சீனாவுடனான சிறிலங்காவின் நெருக்கமே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

அமைச்சர்கள் மீதான மோசடிக் குற்றச்சாட்டு – விசாரிக்குமாறு வடக்கு முதல்வருக்கு ஆளுனர் கடிதம்

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டத்தில் பங்கேற்கவில்லை – இந்தியா புறப்படுகிறார் முதலமைச்சர் விக்கி

முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கும், அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கும், வடக்கு மாகாணசபையில் முடிவு செய்யப்பட்டிருந்த போதும், இன்றைய போராட்டங்களில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை.

நரேந்திர மோடி அரசின் கொள்கை வகுப்பாளர்களைச் சாடுகிறார் கோத்தா

இந்தியாவின் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள், சிறிலங்காவை வேறுவிதமாகப் பார்த்தார்கள் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரண்டாவது போர்க்கப்பலையும் சிறிலங்காவிடம் கையளித்தது இந்தியா

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட 2500 தொன் எடையுள்ள பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்டது.

மாலைதீவும் சிறிலங்காவும் -3

தெற்காசிய அரசியலில் சிறிலங்காவும் மாலைதீவும் சீன பொருளாதார, மூலோபாய தலையீடுகளினால் ஈர்க்கப்பட்டு, உள்நாட்டு அரசியலில் தாக்கங்களை கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்தபோக்குடைய பல்வேறு குணாதிசயங்கள் இருப்பதை காணக் கூடியதாக உள்ளது.

இன்று பிற்பகல் மோடியைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.