18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அமெரிக்கா நடத்தும் RIMPAC என்ற பாரிய கடற்படை ஒத்திகையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த அணியினர் பேர்ள் துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ரொறி மெட்காப் (Prof. Rory Medcalf) அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார். இவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது ‘டெய்லி மிரர்’ நாளிதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கா நடத்தி வரும் பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.
மலேசியாவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த 131 அகதிகளையும் சிறிலங்கா அதிகாரிகளால் இதுவரை சந்திக்க முடியவில்லை. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க கடற்படையின் USNS Mercy என்ற பாரிய மிதக்கும் மருத்துவமனைக் கப்பல், நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய- இராட்சத விமானம் சிறிலங்காவின் மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியுள்ளதாக, விமான நிலைய முகாமையாளர் உபாலி கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு இந்த ஆண்டு மேலும் மூன்று ரோந்துக் கப்பல்களை அவுஸ்ரேலியா வழங்கவுள்ளது. சிறிலங்காவின் கடல்சார் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்தக் கப்பல்கள் வழங்கப்படவுள்ளன.
அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு நாடுகளில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடுகடத்தப்பட்ட 26 இலங்கையர்களுடன், இரண்டு சிறப்பு விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.