மேலும்

Tag Archives: விடுதலைப் புலிகள்

புலம்பெயர் தமிழருடனான பேச்சுக்களை வெளியில் இருந்து கவனிக்கிறதாம் சிறிலங்கா இராணுவம்

புலம்பெயர் தமிழர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களை வெளியில் இருந்து கவனித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 59 முகாம்களை மூடவில்லை – சிறிலங்கா இராணுவத் தலைமையகம் மறுப்பு

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணக் குடாநாட்டில் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக, வெளியான ஊடகச் செய்திகளை சிறிலங்கா இராணுவத் தலைமையகம் நிராகரித்துள்ளது.

தடுப்புக்காவலில் அரசியல் கைதிகள் எவருமில்லை – கைவிரிக்கிறார் சிறிலங்கா நீதி அமைச்சர்

சிறிலங்கா சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் இருப்பவர்கள் கடுமையான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும், தண்டனை நிலுவையில் உள்ளவர்களுமே தவிர, அரசியல் கைதிகள் அல்ல என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புலிகள் மீண்டும் தலையெடுக்கும் ஆபத்து இருக்கிறதாம் – என்கிறார் மகிந்த

விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணையக் கூடிய-  நாட்டில் தீவிரவாதம்  தலையெடுக்கும் ஆபத்து இருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண வன்முறைகளை புலிகளின் பாணி என்கிறார் மகிந்த

யாழ்ப்பாணத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து சிறிலங்கா காவல்துறையினர் கவனமாக இருக்க வேண்டும் என்றும், முன்னரும் இதுபோன்ற செயற்பாடுகள் தான் விடுதலைப் புலிகள் எழுச்சி பெறக் காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

படையினரிடம் சரணடைந்து காணாமற்போன 110 புலிகளின் விபரங்களை வெளியிட்டார் யஸ்மின் சூகா

போரின் முடிவில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து  காணாமற்போன அல்லது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள், தளபதிகள் 110 பேரின் விபரங்களை, ஐ.நாவின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூகா வெளியிட்டுள்ளார்.

பாலச்சந்திரன் சண்டையிலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா

வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதான குற்றச்சாட்டையும், பாலச்சந்திரன் பிரபாகரன் படுகொலைக் குற்றச்சாட்டையும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

போரில் இறந்த உறவுகளை நினைவுகூர தமிழருக்குத் தடையில்லை – சிறிலங்கா காவல்துறை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்த பகுதியிலும், தமிழர்கள் போரில் இறந்த தமது உறவுகளை நினைவு கூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அது அவர்களின் உரிமை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர்  ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு நிதி சேகரித்த 5 ஈழத்தமிழர்களுக்கு ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்கில் உள்ள நீதிமன்றத்தினால் நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, நீதி அமைச்சுகள் ஒத்துழைக்கவில்லை – அதிபர் ஆணைக்குழு குற்றச்சாட்டு

காணாமற்போனோர் குறித்த விசாரணைக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சுக்கள் ஒத்துழைக்கவில்லை என்று சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.