மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

வெள்ளிக்கிழமைக்குள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க மகிந்தவுக்கு உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை ஏப்ரல் 10ஆம் நாளுக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

மகிந்த, நாமலுக்கு எதிராக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் – கபில சந்திரசேன குத்துக்கரணம்

சிறிலங்கன் எயர்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிடம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, அச்சுறுத்தலின் பேரில் வாக்குமூலம் பெற்றதாக,  அவரது சட்டவாளர்கள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசியை  தாக்கல் செய்துள்ளனர்.

60 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தை மகிந்தவிடம் வழங்கியதாக கபில சந்திரசேன வாக்குமூலம்

எயர் பஸ் விமானக் கொள்வனவில் இலஞ்சமாகப் பெறப்பட்ட 60 மில்லியன் ரூபா, அப்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார்.

45 ஈரானிய மாலுமிகளின் சடலங்களை இன்று தெஹ்ரானுக்கு அனுப்ப ஏற்பாடு

காலிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட, ஈரானிய கடற்படைக் கப்பலில் இருந்த 45 மாலுமிகளின் சடலங்கள் முதற்கட்டமாக இன்று தெஹ்ரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

சுரேஷ் சாலே எப்படி அரசாங்கங்களை அசைக்கிறார்?

2016 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தின் போது, ​​சுரேஷ் சாலே என்ற பெயர் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டது.

புலிகளின் தலைவர்கள் சரணடைவதை சிறிலங்கா இராணுவம் விரும்பவில்லை

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கே சிறிலங்கா இராணுவம் விரும்பியதாகவும், புலிகளின் தலைவர்கள் சரணடைவதை விரும்பவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு முன்னிலையாகாத ஷிரந்தி – 2 வார அவகாசம் கோரினார்

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, தனிப்பட்ட காரணங்களினால்  முன்னிலையாக முடியாது என  அறிவித்துள்ளார். 

மகிந்தவைத் தூக்கில் போட வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை தூக்கில் போட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல் – மலைக்க வைக்கும் சொத்துகள் விபரம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கேணல் நெவில் வன்னியாராச்சியை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரகம   உத்தரவிட்டுள்ளார்.

மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின், தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.