மேலும்

Tag Archives: பிரிகேடியர்

நிறைவுக்கு வந்தது புனேயில் நடந்த இந்திய – சிறிலங்கா படைகளின் 14 நாள் கூட்டுப் பயிற்சி

இந்திய – சிறிலங்கா படைகளுக்கு இடையில், ‘மித்ரசக்தி -2015 ‘ என்ற பெயரில் புனேயில் உள்ள இந்திய இராணுவத் தளத்தில் இரண்டு வாரங்களாக நடத்தப்பட்டு வந்த கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

பிரகீத் கடத்தல் குறித்து 4 இராணுவ அதிகாரிகள் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலை தொடக்கம் விசாரிக்கப்பட்டு வந்த நான்கு இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

வாகனங்களைப் பயன்படுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

மீரிஹானவில் சிறிலங்கா இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த வெள்ளை வான் ஒன்று காவல்துறையினரிடம் அகப்பட்டதை அடுத்து, பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் வாகனங்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளை வான் சர்ச்சையில் வெளிவரும் புதிய தகவல்கள்

மிரிஹான பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு  கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் சிறிலங்கா இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து வந்தது என்றும், அதிலிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்குச் சொந்தமானது என்றும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தியத்தலாவ இராணுவ முகாமில் துப்பாக்கிகள் மாயம் – விசாரணைக்கு உத்தரவு

தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகள் காணாமற்போயுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வடக்கிலுள்ள படையினரின் தொகையை வெளியிட இராணுவப் பேச்சாளர் மறுப்பு – பாதுகாப்பு இரகசியமாம்

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை எந்தக் காரணம் கொண்டும் வெளியிட முடியாது என இராணுவப் பேச்சாளர்  பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். பலாலியில் நேற்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரபாகரனின் கைத்துப்பாக்கியை மீட்கவில்லையாம் – சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவரது சடலத்துடன் சிறிலங்கா படையினரால் மீட்கப்படவில்லை என்று சிறிலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் அதிபர் பாதுகாப்பு பிரிவு கலைப்பு

சிறிலங்கா இராணுவத்தில் இருந்த, அதிபர் பாதுகாப்புப் பிரிவு (President’s Guard) கலைக்கப்பட்டு, அதிலிருந்து படையினர், தத்தமது படைப்பிரிவுகளுக்குச் செல்லப் பணிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டையில் சீனக் கடற்படைத் தளமா? – சிறிலங்கா நிராகரிப்பு

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனக் கடற்படைத் தளம் அமையவுள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.