திருகோணமலையில் இன்று ஆரம்பமாகிறது அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி
அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைத் துறைமுகத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைத் துறைமுகத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில அரசாங்கம் சிறிலங்காவில் கைத்தொழில் நடைக்கூடம் ( industrial corridor ) ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிறிலங்காவுடனும் இந்தியாவுடனும் ஜப்பான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவும், ஜப்பானும் ஆர்வம் காட்டி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கடலில் நேற்றுக்காலை தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு யானைகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டு, பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.
கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பல்வேறு விடயங்களிலும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரே நேரத்தில் இரண்டு சமூகங்களுடன் போட்டிபோட வேண்டிய நிலையிலிருக்கின்றனர். இந்த விடயங்களை கருத்தில் கொண்டே எமது புலம்பெயர் சமூகம் கிழக்கு மாகாணத்தில் கூடுதல் கரிசனையை வெளிப்படுத்தி வருகிறது.
நாட்டில் ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு அரசியலமைப்பை அறிமுகப்படுத்த, தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நாளை மறுநாள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர்.
சம்பூரில் இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்கும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் கைவிட்டுள்ளது. அங்கு 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையமே அமைக்கப்படும் என்று, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டு, கூட்டு எதிரணியைப் பலப்படுத்தும், பரப்புரைகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச திருகோணமலையில் தொடங்கவுள்ளார்.