மேலும்

Tag Archives: ஜெனிவா

சிறிலங்கா  வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா சில சாதகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்று பிரித்தானிய வெளிவிவகார பணியக அமைச்சர் அகமட் தெரிவித்துள்ளார்.

உயர்மட்டக் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழு பங்கேற்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனிவாவின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் – அனைத்துத் தரப்புகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

புதிய தீர்மான வரைவு குறித்து மார்ச் 5இல் ஜெனிவாவில் முதல் கலந்துரையாடல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மான வரைவு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் மார்ச் 5ஆம் நாள் இடம்பெறவுள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்காவுடன் மல்லுக்கட்டத் தயாராகும் அரச சார்பற்ற நிறுவனங்கள்

மனித உரிமைகள் விவகாரங்களில், ஐ.நா மனித உரிமைகள்  பேரவையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் மீது, அரச சார்பற்ற நிறுவனங்கள் கடும் அதிருப்தியை வெளியிடவுள்ளன.

ஜெனிவா தீர்மான இணை அனுசரணையில் இருந்து விலகுகிறது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினரை தண்டிப்பதால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – ஜெனரல் ரத்நாயக்க

சிறிலங்கா படையினரைத் தண்டிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது,  அவ்வாறு செய்வதன் மூலம்  நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால், அது வெற்றி பெறாது, என்றும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

ஆட்சியமைத்ததும் ஜெனிவா தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம் – ஜி.எல். பீரிஸ்

சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைத்த பின்னர், 2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் என்று, அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மார்ச் 8இல் வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வரும் மார்ச் 8ஆம் நாள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நாவின் உயர்மட்டக் குழு சிறிலங்காவில் – ஜெனிவா அறிக்கைக்கு முன்னோடி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதம் அடுத்தமாதம் நடக்கவுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டஅதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது.