மேலும்

Tag Archives: ஐ.நா

சிறிலங்காவில் இனி என்ன?

ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இனிவருங் காலங்களில் எவ்வாறு தொடரப்படும்? தமிழர் பிரச்சினைகள் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்குமா? ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள கூட்டத் தொடரில் கொழும்பில் மூலோபாயம் என்ன?

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை நாளை மைத்திரியிடம் கையளிப்பு?

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் போர்க்குற்ற அறிக்கையின் பிரதி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தவார முற்பகுதியில் கையளிக்கப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்கூட்டியே கசியாது ஐ.நா அறிக்கை – 48 மணிநேரத்துக்கு முன்னரே சிறிலங்காவிடம் கையளிப்பு

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு 48 மணிநேரம் முன்னதாகவே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் சித்திரவதைகள் – ஐ.நாவுக்குத் தெரியாதாம்

சிறிலங்காவில் போருக்குப் பின்னரும் தடுப்புக் காவலில் இருக்கும் கைதிகள் மீது சித்திரவதைகள் தொடர்வதாக வெளியான அறிக்கை தொடர்பாக ஐ.நா அறியவில்லை என்று, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் எத்தகைய உதவிகளும் வட மாகாணசபை ஊடாக வழங்கப்படாது – சிறிலங்கா அரசாங்கம்

வடக்கு மாகாணத்தில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐ.நாவினால்  மேற்கொள்ளப்படும் எத்தகைய உதவிகளும், வடக்கு மாகாணசபை ஊடாக வழங்கப்படமாட்டாது என்றும், மத்திய அரசாங்கத்தின் புனர்வாழ்வு அமைச்சு ஊடாகவே வழங்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காணாமற்போகச் செய்யப்பட்டோர் குறித்த ஐ.நா செயலணிக்குழுவின் சிறிலங்கா பயணம் இடைநிறுத்தம்

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா செயலணிக்குழு, வரும் திங்கட்கிழமை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐ.நா – சிறிலங்கா இடையே இரகசிய இணக்கப்பாடு இல்லை என்கிறார் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

சனல் 4 ஊடகம் குறிப்பிட்டது போல, சிறிலங்கா அரசாங்கத்துக்கும் ஐ.நாவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏதும் இருக்கும் என்று தாம் நம்பவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் பொதுமக்களை காப்பாற்றத் தவறிவிட்டது ஐ.நா – மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில், பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த – கருத்து வெளியிட மறுக்கிறது ஐ.நா

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவது குறித்து கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.

கொழும்பிலுள்ள மனிதாபிமான விவகாரப் பணியகத்தை மூடுகிறது ஐ.நா

சிறிலங்காவில் உள்ள ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்புப் பணியகம், இந்த ஆண்டு இறுதியில் மூடப்படவுள்ளது.