மேலும்

Tag Archives: ஐக்கிய தேசியக் கட்சி

வெளியேறுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி – உடைகிறது கூட்டு அரசு

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேற சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மீண்டும் மகிந்த அலை – 42 வீத வாக்குகளுடன் முன்னிலையில்

சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி சுமார் 42 வீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பொதுஜன முன்னணிக்கு 359 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

சுதந்திரக் கட்சிக்கு காத்திருக்கும் பேரிடி – 7 உள்ளூராட்சி சபைகளையே கைப்பற்ற வாய்ப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேக பெரும் வெற்றியைப் பெறும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 வரையான சபைகளிலேயே வெற்றி பெறும் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரியின் முடிவினால் ஐதேக அதிருப்தி

தமது பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியமை, அவரை ஆட்சியில் அமர்த்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிவில் சமூகத்துக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவுடன் காலாவதியானது புரிந்துணர்வு உடன்பாடு – கூட்டு அரசு நிலைக்குமா?

கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்பாடு நேற்று நள்ளிரவுடன் காலாவதியாகியுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் – மன்னாரில் 5 சபைகளுக்கு 11 கட்சிகள், 1 சுயேட்சைக் குழு போட்டி

வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில்,  மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கும், 11 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றன.

மகிந்தவுக்கு முந்திரி கொடுத்த மலிக் சமரவிக்கிரம

அரசியலமைப்பு மாற்றம், உள்ளூராட்சித் தேர்தல் ஏற்பாடுகள் என்று சிறிலங்கா அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியலில் எதிர் எதிர் சக்திகளாக இயங்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஒன்றாக அமர்ந்து ரகர் போட்டியை கண்டு களித்தனர்.

ஜனவரி 20இல் உள்ளூராட்சித் தேர்தல்?

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி 20ஆம் நாள் அல்லது அதனை அண்டிய ஒரு நாளில் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்கா அமைச்சரும் நாடாளுமன்ற அவை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சிக்குள் சிறிசேன நடத்தும் போராட்டம்

உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற தனது பதவியை மேலும் தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தேர்தல்களுக்குத் தயாராகுங்கள் – ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு

எதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராகும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.