மேலும்

மலேசியாவில் 26,615 சிறிலங்கா அகதிகளுக்கு யுஎன்எச்சிஆர் அனுமதி

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலேசியாவில் தங்கியிருப்பதற்கு 26,615 சிறிலங்கா அகதிகளுக்கு,  அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ( யுஎன்எச்சிஆர் )அங்கீகாரம் அளித்திருப்பதாக, மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

புதிய கட்சியின் தலைமையை மகிந்த ஏற்றுக்கொள்ளுவார் – பசில் அறிவிப்பு

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தவராசா நீக்கம் – மகிந்த அமரவீர

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சின்னத்துரை தவராசா நீக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் – இந்தியத் தூதரகம் அறிவுரை

இந்தியாவுக்குப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்குவதற்கு மகிந்த எதிர்ப்பு

முதலீட்டுத் தேவைகளுக்காக அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் காணிகளை சீனாவுக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எவரும் தடுத்து வைக்கப்படவில்லையாம் – சிறிலங்கா கூறுகிறது

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேநபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவிடம் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் தேசியமட்ட துடுப்பாட்டப் போட்டியில் ஈழத்தமிழர் அணி கோப்பையை வென்றது

அவுஸ்ரேலியாவில் நடந்த தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டி ஒன்றில், சிறிலங்காவில் இருந்து புகலிடம் தேடிக் சென்ற தமிழ் இளைஞர்களின் அணி வெற்றியைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா புலனாய்வு தலைவரைத் திணறடித்த ஐ.நா நிபுணர்கள் – பிணையெடுத்தார் சட்டமாஅதிபர்

பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக, சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிசிடம், ஐ.நா நிபுணர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பி திணறடித்தனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கையளிக்கும் உடன்பாடு ஜனவரியில் கைச்சாத்து

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் இறுதிப்படுத்தப்படும் என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.

ஆவா குழு சந்தேகநபர்கள் 11 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.