மேலும்

கைது செய்யப்பட்ட அதிகாரிகளுடன் இலஞ்சப் பணத்தை பகிரவிருந்த முக்கிய பிரமுகர்

சிறிலங்கா அதிபரின் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க ஆகியோரால் பெறப்பட்ட இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதி முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் பங்கிடப்படவிருந்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

படகு மூலம் தாயகம் திரும்பிய 14 அகதிகள் சிறிலங்கா கடற்படையினரால் கைது

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பிக் கொண்டிருந்த 14 தமிழ் அகதிகளை வடக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

சபாநாயகர் ஆசனத்தில் அமரும் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மாதம் முடக்கப்பட்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வு மீண்டும் நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ளது.

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு 135 மில்லியன் ரூபா மாதாந்த கொடுப்பனவு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள  8,691 உறுப்பினர்களுக்கும், மாதம்தோறும், 135 மில்லியன் ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எண்ணெய்க் கப்பலில் பயணித்த 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது

அவுஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 130 இலங்கையர்கள் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்திய- சிறிலங்கா கடற்படைகள் நடுக்கடலில் நீண்ட பேச்சு

சிறிலங்கா- இந்திய கடற்படைகளுக்கிடையிலான, 29 ஆவது அனைத்துலக கடல் எல்லைக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் – ஜப்பானிய நிபுணர் குழு சிறிலங்கா அதிபருடன் பேச்சு

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் சிறப்பு ஆலோசகர்  கலாநிதி ஹிரோரோ இசுமி தலைமையிலான ஜப்பானிய அதிகாரிகளின் சிறப்புக் குழுவொன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

காலி முகத்திடலில் மகிந்த அணியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு

காலி முகத்திடலில் மே நாள் பேரணியை நடத்துவதற்கு, கூட்டு எதிரணிக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.

20 ஆவது திருத்தச்சட்டம் நாட்டைப் பிளவுபடுத்தும் – மகா சங்கம் எச்சரிக்கை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தச்சட்டம், நிறைவேற்றப்பட்டால் நாடு பிளவுபடும் என்று சிறிலங்காவின் பௌத்த பிக்குகளைக் கொண்ட தேசிய விஸ்வத் சங்க சபா எச்சரித்துள்ளது.