மேலும்

பதவியில் இருந்து இறங்க மறுக்கிறது மகிந்த அணி

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நிராகரித்துள்ள, அரசாங்கத் தரப்பு, மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகமாட்டார் என்று அறிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வெளியே பதற்றம்

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை மகிந்த தரப்பு நிராகரித்துள்ள நிலையில், சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வெளியே பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தற்போது, செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மகிந்த தரப்பு ஏற்க மறுத்து வரும் நிலையில், ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய கடிதம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று சற்று நேரத்தில் கூடவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகம் பெரும் பரபரப்பான நிலையில் உள்ளது. இரண்டு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்று நேரகாலத்துடனேயே சபைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா

பிரதமரை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறி, மாட்டிக் கொண்டுள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் பைசர் முஸ்தபா.

நாடெங்கும் பாதுகாப்பை தீவிரப்படுத்த நள்ளிரவில் உத்தரவு

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, நாடு முழுவதும், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தி வைத்திருப்பதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிக்கிறது ஜப்பான்

ஜப்பானின் நீண்டகால நட்பு நாடான சிறிலங்காவில், நாடாளுமன்றக் கலைப்பு உள்ளிட்ட அண்மைய அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்

சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது தற்போது முக்கியம் என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.