மேலும்

திருகோணமலை துறைமுகத்தின் அதி நவீன ராடர் – புதிய வசதிகளுடன் தயாராகிறது

திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்கள், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் செயற்படத்தக்க வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு வசதிகள் செய்யப்படவுள்ளன. துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மாலியில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினருக்கு 50 ஆயிரம் டொலர் இழப்பீடு

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, கண்ணிவெடித் தாக்குதலில் பலியான சிறிலங்கா இராணுவத்தினருக்கு தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு வழங்கப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி மூலம் தீர்வு கிடைக்காது – சிறிலங்கா பிரதமர்

இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சியை ஏற்கவில்லை கூட்டமைப்பு – உதய கம்மன்பில

ஒற்றையாட்சி அரசு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நொவம்பர் 10 க்குள் தேர்தலை நடத்தாவிடின் பதவி விலகுவேன் – மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை

நொவம்பர் 10ஆம் நாளுக்கு முன்னதாக, மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால்,  பதவியில் இருந்து விலகப் போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்புச் செயலரை பதவி நீக்கும் திட்டம் இல்லை

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற போதும், அந்தப் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என, அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாலியில் இருந்து வெளியேறுமா சிறிலங்கா இராணுவம்?

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய – சிறிலங்கா படைகள் தெற்கு கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா படைகளுடன் இணைந்து ஜப்பானிய கடற்படையின் இரண்டு ஆழ்கடல் கண்காணிப்பு விமானங்கள், தென்பகுதி கடல்பரப்பில் கூட்டு கடல் கண்காணிப்பு பயிற்சி ஒத்திகையை மேற்கொண்டுள்ளன.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி – சிறிலங்கா அரசுடன் கூட்டமைப்பு பேச்சு

சிறிலங்கா விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.

புலிகளின் சீருடையில் படம் எடுத்து புலம்பெயர் தமிழர்களிடம் பணம் கறக்க முயன்றவர்கள் கைது

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.