மேலும்

தமிழ் ஈழம் சைபர் படையே தாக்குதல் நடத்தியதாம்

தமிழ் ஈழம் சைபர் படை என்ற குழுவே, சிறிலங்காவில் 11 இணையத்தளங்களின் மீது நேற்று சைபர் தாக்குதலில், ஈடுபட்டது, என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரச கட்டமைப்புகளுக்குள் சஹ்ரான் குழு ஊடுருவல் – நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளரும் கைது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டு, தற்போது தடை செய்யப்பட்டுள்ள, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் ஆற்றல் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கும் இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும்- தரன்ஜித் சிங் சந்து

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்

சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

நினைவேந்தல் நிகழ்வுக்கு தயார் நிலையில் முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் இடம்பெறவுள்ளது.

நிச்சயம் போட்டியிடுவேன் – கோத்தா

வரும் அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் பேரூழியின் பத்தாண்டுகள்

சிங்களப் பேரினவாத அரசுடன், உலகம் முழுதும் இணைந்து நடத்திய, முள்ளிவாய்க்கால் பேரூழியில், உயிரையும், உடலையும், இனத்தின் விடுதலைக்காகக் கொடுத்து, மண்ணில் விதையான அனைவரையும் இந்நாளில் நினைவில் கொள்வோம்.

கொச்சிக்கடை குண்டுதாரியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அலாவுதீன் அகமட் முவாத்தின் மனைவி, முதலாவது குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ள சிறிலங்கா

எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் தெரிவித்துள்ளார்.