மேலும்

வித்தியா படுகொலை: காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் கடும் நடவடிக்கை

புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலையை அடுத்த யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நிழல் அமைச்சரவையை அமைத்து ஆட்சியை பிடிக்க வியூகம் வகுக்கிறார் மகிந்த

மீண்டும் அரசியலில் குதிக்கத் தயாராகி வரும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிழல் அமைச்சரவை ஒன்றை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிழல் அமைச்சரவையில் 5 முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மாணவி வித்தியாவுக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

புங்குடுதீவில், கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றுமாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

எனக்கெதிராக மூன்று மாறுபட்ட அரசியல்சக்திகள் ஒன்றுபட்டுச் செயற்பட்டன – வி.ரி.தமிழ்மாறன்

புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி வி.ரி.தமிழ்மாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரான்சில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் உயர்விருதை வென்றது ‘தீபன்’

பிரான்சில் நேற்றிரவு நடந்த உலகப் புகழ்பெற்ற 68வது கேன்ஸ் திரைப்பட விழாவில், முன்னாள் ஈழப்போராளியின் புலம்பெயர் வாழ்வை சித்திரிக்கும் தீபன் திரைப்படம், Palme d’Or  என்ற உயரிய விருதை பெற்றுள்ளது.

நீதிமன்றத் தாக்குதல் குறித்து விசாரிக்க 15 பேர் கொண்ட சிஐடி குழு யாழ். வருகை

யாழ். நீதிமன்றம் மீது கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துவதற்காக, சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 15 பேர் கொண்ட விசாரணைக் குழு யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கூட்டுப்படைகளின் தளபதியாகப் பொறுப்பேற்கிறார் எயர் மார்ஷல் கோலித குணதிலக

சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக- விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கோலித குணதிலக நியமிக்கப்படவுள்ளார். அவர் அடுத்தவாரம் தனது புதிய பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

யாழ்.நீதிமன்றத் தாக்குதலை அடுத்து வடக்கிற்கு எரிபொருள் கொண்டு செல்ல தடைவிதித்த அரசாங்கம்

யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மீது கடந்தவாரம் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, வடக்கிற்கு எரிபொருள் கொண்டு செல்வதை அரசாங்கம் இடைநிறுத்தியதாக தகவல்கள வெளியாகியுள்ளன.

அரசியலமைப்புச்சபைக்கு சம்பந்தன், ராதிகா குமாரசாமி பெயர்கள் பரிந்துரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 10 பேர் சிறிலங்காவின் அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். கடுமையான விவாதங்களின் பின்னர் இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் ஓகஸ்ட் 27ம் நாள் நாடாளுமன்றத் தேர்தல்? – கொழும்பு வாரஇதழ் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஓகஸ்ட் 27ம் நாள் நடைபெறலாம் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில  வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.