மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

நீதியரசர்கள் நியமனத்தில் அரசியலமைப்புச் சபை விடாப்பிடி

உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்களாக நியமிக்கப்படுவதற்கு, நீதியரசர்கள் துரைராஜா மற்றும் அமரசேகர ஆகியோரின் பெயர்களை அரசியலமைப்பு சபை மீண்டும் உறுதிசெய்துள்ளது.

வேட்பாளரை தீர்மானிக்கும் உரிமையை விட்டுத்தர முடியாது – பீரிஸ்

அடுத்த அதிபர் வேட்பாளரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சீனக்குடாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தினால் சர்ச்சை

சிறிலங்காவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றி வந்த தனியார் ஜெட் விமானம்  ஒன்று, திருகோணமலை, சீனக்குடா விமானத் தளத்தில் இருந்து, அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்னியில் வெள்ளத்தினால் 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு

அண்மையில் வன்னிப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவடைந்துள்ளன என்று, சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொண்ட தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

மைத்திரி, ரணிலுக்கு சீன அதிபரின் தாமதமான வாழ்த்து

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த, சீனத் தூதுவர் செங் ஷியுவான், சீன அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அவரிடம் நேரில் கையளித்துள்ளார். நேற்று முன்தினம், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மார்ச் 05ஆம் நாள் வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மார்ச் 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மகிந்தவின் வழிகாட்டலிலேயே பொதுஜன முன்னணி செயற்படும் – பசில்

மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழேயே, சிறிலங்கா பொதுஜன முன்னணி செயற்படும் என்று அந்தக் கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

ஒற்றையாட்சி, பௌத்தத்துக்கு முன்னுரிமை – ஐக்கிய தேசிய முன்னணி முடிவு

புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களைச் செய்வதில்லை என்றும், ஐக்கிய தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது.