மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

“எங்கள் வாக்கு சிங்கள பௌத்தருக்கே” – தெற்கில் தூண்டப்படும் இனவாதம்

கேகாலை மாவட்டத்தில் இனவாதத்தைத் தூண்டும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்  ஐதேகவின் பொதுச்செயலர் கபீர் காசிம்.

தேசிய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக சிசிர மென்டிஸ் நாளை பதவியேற்கிறார்

ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிஸ், சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை தனது பதவியை ஏற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நடக்கும் சுவரொட்டிப் போர்

சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரதவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தினமும் சுவரொட்டி தொடர்பான இழுபறிப் போர் ஒன்று நடந்து வருகிறது.

வடக்கில் படைகளைக் குறைக்கவில்லை – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் இருந்து  இராணுவமுகாம்கள் எதுவும் அகற்றப்படவில்லை என்றும்,  நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலையெடுப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.

நாளை மாலைதீவு செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மாலைதீவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மாலைதீவின் தேசிய சுதந்திர நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவே சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மைத்திரியின் அணிவகுப்புக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் ரவை – பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த கடெற் மாணவரின் துப்பாக்கியில், ரவை ஒன்று சிக்கியிருந்ததை, சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புப் பிரிவினர் கண்டறிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்தவின் விரல்களை நசித்தவர் மன்னிப்புக் கோரினார்

அக்குரஸ்ஸவில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஆவேசமடையக் காரணமாக இருந்தவர், தனது செயலுக்காக நேற்று மன்னிப்புக் கோரியுள்ளார்.

அம்பாந்தோட்டையில் கப்பல்கட்டும் தளத்தை அமைக்க சீனா திட்டம்- சிறிலங்கா பச்சைக்கொடி

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கப்பல் கட்டும் மற்றும் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளத்தை அமைப்பது தொடர்பான சாத்திய ஆய்வை சீன நிறுவனம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்காவின் தேசியக்கொடியை தீயிட்டு எரிக்க வேண்டும் – வட்டரகே விஜித தேரர்

சிறிலங்காவின் தேசியக்கொடி தீயிட்டு எரிக்கப்பட வேண்டும் என்று, நவ சம சமாஜக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர், வண.வட்டரகே விஜித தேரர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவியை உதறினார் ஜனக பண்டார – கவிதை வடிவில் மைத்திரிக்கு கடிதம்

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த, மாகாணசபைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று பதவி விலகியுள்ளார்.