மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் – தோல்வியுற்றவர்களுக்கு வாய்ப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஐதேகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், சமர்ப்பித்துள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான பட்டியலில், தேர்தலில் தோல்வியுற்ற பலருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பிரதமராகப் பதவியேற்றார் ரணில் – மகிந்தவும் பங்கேற்றார்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்ற காலை புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியானது

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்த ஆதரவு அணியின் பலம் 60 ஆக குறைந்தது – எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மறுக்கிறார்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலம் 60 ஆக குறைந்துள்ளது. மகிந்த ராஜபக்சவினால் நேற்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் கூட்டப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், 60 பேர் மட்டும் பங்கேற்றிருந்தனர்.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் யாருக்கு?- சம்பந்தன் பதில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என்று, அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிந்த, மைத்திரி ஏட்டிக்குப் போட்டியாக சந்திப்பு

புதிதாகத் தெரிவாகியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் இருந்து தெரிவான உறுப்பினர்களின் விருப்பு வாக்குகள்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அவர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் தோல்வி

நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள நிலையிலும், அதன் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தோல்வியடைந்துள்ளனர்.

படுதோல்வி கண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் படுதோல்வி கண்டுள்ளது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி. 2010ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவிபியுடன் இணைந்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி, 7 ஆசனங்களைக் கைப்பற்றியது.

தேசியப்பட்டியலிலும் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேசியப் பட்டியலில் இரண்டு ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசியப் பட்டியல் மூலம் நிரப்பப்படும், 29 ஆசனங்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்த விபரங்களை தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.