மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

வன்னி மாவட்ட இறுதி முடிவு – 4 ஆசனங்களைக் கைப்பற்றியது தமிழரசுக் கட்சி

வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள் – ஈபிடிபி, ஐதேகவுக்கு தலா 1

யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஈபிடிபி மற்றும் ஐதேக ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் ஐதேகவுக்கு 2, கூட்டமைப்புக்கு 1, ஐ.ம.சு.முக்கு 1 ஆசனம்

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலைத் தொகுதியை தமிழரசுக் கட்சியும், மூதூர் தேர்தல் தொகுதியை ஐதேகவும், சேருவெல தொகுதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியுள்ளன. 

முடிந்தது வாக்களிப்பு – தமிழர் பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவு

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளதையடுத்து, வாக்குப் பெட்டிகளை முத்திரையிட்டு, அவற்றை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அனுராதபுர, கம்பகா மாவட்டங்களில் வாக்களிப்பில் அதிக ஆர்வம்

அனுராதபுர, கம்பகா மாவட்டங்களில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுராதபுர மாவட்டத்தில், காலை 10 மணியளவிலேயே 40 வீத வாக்குகள் பதிவாகி விட்டதாக மாவட்ட தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

வவுனியா, மன்னார் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு

நாளை நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக் கூடும் என்று அடையாளம் காணப்பட்ட வவுனியா, மன்னார் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மேலதிக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர் யார்?

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவரை நேற்று சிறிலங்காவுக்கு நாடு கடத்தியுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

மைத்திரியின் ஆட்டம் ஆரம்பம் – சுசில், அனுரவை பதவியில் இருந்து நீக்கினார்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்தவையும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கியுள்ளார்.

மைத்திரியின் கடிதத்தை வெளியிடக் கூடாது – தேர்தல் ஆணையாளர் உத்தரவு

மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எழுதிய கடிதத்தை திரும்பத் திரும்ப வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்காவில் சித்திரவதைகள் – ஐ.நாவுக்குத் தெரியாதாம்

சிறிலங்காவில் போருக்குப் பின்னரும் தடுப்புக் காவலில் இருக்கும் கைதிகள் மீது சித்திரவதைகள் தொடர்வதாக வெளியான அறிக்கை தொடர்பாக ஐ.நா அறியவில்லை என்று, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.