மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

இரண்டு கட்டங்களாக நடக்கிறது இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி

திருகோணமலையில் நேற்று ஆரம்பமாகியுள்ள இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளன.

சூளைமேடு கொலை வழக்கில் காணொளித் தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிக்கிறார் டக்ளஸ்

சென்னை, சூளைமேட்டில் 1986ஆம் ஆண்டு ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், ஈபிடிபி பொதுச்செயலரும், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, காணொளித் தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார்.

இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் பாரிய கூட்டுப்பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பம்

சிறிலங்கா- இந்திய கடற்படைகளுக்கு இடையிலான பாரிய கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது.

உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் குடியுரிமை பறிப்பு – பரணகம ஆணைக்குழு பரிந்துரை

முன்மொழியப்பட்ட உள்நாட்டு பொறுப்புக்கூறும் செயல்முறைகள் மற்றும் போருக்குப் பிந்தைய நல்லிணக்க செயல்முறைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களின் குடியுரிமையைப் பறிக்க, காணாமற்போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

யோசித ராஜபக்ச குறித்த விசாரணை அறிக்கையை மூடிமறைக்கிறது பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப். யோசித ராஜபக்ச, தொடர்பான விசாரணை அறிக்கையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மூடிமறைப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

பாலியல் இலஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டப்பட்ட அதிகாரி மன்னாருக்கு மாற்றம்

முழங்காவில் பகுதியில் இந்திய வீடமைப்புத் திட்ட உதவிக்குப் பாலியல் இலஞ்சம் கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, சிறிலங்கா காவல்துறைமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவம் மீது போர்க்குற்றம் சுமத்தவில்லையாம் – கூறுகிறார் பரணகம

தமது ஆணைக்குழு முன்வைத்த அறிக்கையில், சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தும் வகையில்  எந்த விடயங்களையும் முன்வைக்கவில்லை  என்று, காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர்  ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

தமிழீழம், புலிகள் தோன்றக் காரணம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையே – சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததே, தமிழீழம், புலிகள் என்ற வாதங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

சமத்துவமான உறவை சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது சீனா

சமத்துவமான நடத்தப்படுவதன் மூலமே, சிறிலங்காவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது.

இன்று சிறிலங்கா வருகிறார் ஐ.நா உதவிச்செயலர்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும், 25ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.