மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து ‘காப்பாற்றப்படும்’ சிறிலங்கா கடற்படை அதிகாரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று கூறப்பட்ட, சிறிலங்கா கடற்படை அதிகாரியான லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதது, சட்டத்துறை வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரவிராஜ் படுகொலை தொடர்பாக ஆறு பேர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, ஆறு பேர் மீது சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து ஆராய கொழும்பில் கூடுகிறது கூட்டமைப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கான பரப்புரை உத்திகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்தவாரம் கொழும்பில் கலந்துரையாடவுள்ளது.

முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

தாய்லாந்தில் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கை சென்றடைந்தார்.

இன்றுடன் முடிகிறது இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி

இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் கடந்த ஆறு நாட்களாக இடம்பெற்று வந்த கூட்டுப் பயிற்சி இன்று நிறைவடையவுள்ளது. ‘SLINEX 2015’ என்று பெயரிடப்பட்ட இந்தக் கூட்டுப் பயிற்சி கடந்த மாதம் 27ஆம் நாள் ஆரம்பமானது.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா- சிறிலங்கா பேச்சு

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அமெரிக்க உயரதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

தமிழர்களின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாக கொடுக்கமாட்டார்கள் – எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்காவில் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை, பெரும்பான்மைச் சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று  தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான நோர்வேயின்,  முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

மர்மப்பொருள் அம்பாந்தோட்டைக்கு அப்பால் கடலிலேயே விழும் – ஆர்தர் சி கிளார்க் மையம்

விண்வெளியில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும், விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படும், WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள, மர்மப்பொருள், அம்பாந்தோட்டைக்கு அப்பால் 100 கி.மீ தொலைவில் கடலிலேயே விழும் என்று ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.

சிறைகளில் குற்றச்சாட்டு சுமத்தப்படாத அரசியல் கைதிகள் யாருமில்லையாம்

குற்றச்சாட்டுகளின்றி எவரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.