மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா நெருங்கி விட்டது – ஐரோப்பிய ஒன்றியம்

மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளால் 2010ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா மீளப்பெறுகின்ற கட்டத்தை நெருங்கி விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொன்லன்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

டில்ருக்சியின் பதவிவிலகலை ஏற்றுக் கொண்டார் சிறிலங்கா அதிபர்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவின் அபிவிருத்திக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது.

‘கோத்தாவின் போர்’: எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

தாம் எதிர்பார்த்தது போன்று கோத்தாவின் போர் நூல் பிரபலமடையவில்லை என்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்க சந்தேகநபரை சுட்டுக்கொன்ற மேஜர் 20 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்தினார்

தடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபரைச் சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி, கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி, 20 இலட்ச ரூபா இழப்பீடு செலுத்தினார்.

பிரதம நீதியரசர் வசம் நாட்டு நிர்வாகம் இருக்கவில்லை – சபாநாயகர் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர், பிரதமர், சபாநாயகர் ஆகியோர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், பிரதம நீதியரசர் சிறீபவனே சிறிலங்கா அரச நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்ததாக வெளியான தகவலை சபாநாயகர் மறுத்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எல்லாவிதத்திலும் ஆதரவு வழங்குவதாக ரஷ்யா உறுதி

சிறிலங்காவுக்கு எல்லா விதத்திலும் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பணிப்பாளர் பதவி விலகினார் – மைத்திரிக்குப் பதிலடி

சிறிலங்காவின் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்க தமது பதவியில் இருந்து விலகுவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை, சிறிலங்கா அதிபருக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார்.

பிரிக்ஸ், பிம்ஸ்ரெக் மாநாடுகளில் சிறிலங்கா அதிபர் பங்கேற்பு

கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

சிறிலங்கா அதிபருடன் இந்தியப் பிரதமர் சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க கோவா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.