மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கோத்தாவுக்கு அஞ்சினார் மகிந்த – ராஜித சேனாரத்ன

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட கடும்போக்குவாத பொது பலசேனா அமைப்பு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரவணைப்பிலேயே இருந்தது என்று,  சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ரணிலுக்கு முதுகில் குத்தமாட்டேன் – மகிந்த

ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத போது  ஆட்சியைக் கவிழ்க்கமாட்டேன் என்றும், எனவே அவர் அச்சமின்றி, பாதுகாப்பாக சுவிற்சர்லாந்து சென்று வரலாம் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கப்படும் பலாலி – சிறிலங்கா பிரதமர்

தென்னிந்தியாவுக்கும் விமான சேவைகளை மேற்கொள்ளும் வகையில், பலாலி விமான நிலையம், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – செயலணியின் பரிந்துரையை சிறிலங்கா நிராகரிப்பு

போர்க்கால மீறல்கள் குறித்த விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்க வேண்டும் என்று, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி முன்வைத்திருந்த அறிக்கையின் பரிந்துரையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

எந்த நாட்டினது உத்தரவுக்கும் அடி பணியோம் – சிறிலங்கா அரசு

எல்லா நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியான நல்ல உறவுகளைப் பேணிக் கொண்டாலும், எந்த நாட்டினது உத்தரவுக்கும் சிறிலங்கா கீழ்ப்பணியாது என்று சிறிலங்கா அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

சரணடைந்த புலிகளின் பட்டியலை ஜனவரி 30இல் சமர்ப்பிக்க சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவு

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

ரணில் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பேன் – மகிந்த

ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருக்கும் போது  அவரது ஆட்சியைக் கவிழ்க்கப் போவதில்லை, அவர் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

மகிந்தவுக்கு ரணில் சவால்

தாம் இம்மாதம் ஒரு வாரப் பயணமாக சுவிற்சர்லாந்து செல்லவுள்ளதாகவும், முடிந்தால், தமது அரசாங்கத்தைக் கவிழ்த்துக் காட்டட்டும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்குச் சவால் விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மகிந்த – போட்டு உடைக்கிறது பொது பலசேனா

கடந்த ஆட்சிக்காலத்தில் அளுத்கம மற்றும் பிற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவே இருந்தார் என்று, சிங்கள பெளத்த அடிப்படைவாத அமைப்பான பொது பலசேன குற்றம்சாட்டியுள்ளது.

சீனக்குடா விவகாரம் குறித்த இந்திய அரசுடன் தான் சிறிலங்கா பேச வேண்டும் – ஐஓசி

திருகோணமலை – சீனக்குடாவில், ஐஓசி எனப்படும் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று எண்ணெய்க் குதங்களை மீளப்பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், இதுகுறித்து இந்திய அரசாங்கத்துடன் சிறிலங்கா பேச்சு நடத்த வேண்டும் என்று இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.