மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுங்கள் – நாடாளுமன்றில் சம்பந்தன் ஒன்றரை மணிநேரம் உரை

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை உண்மையாக நிறைவேற்றுவதில், சிறிலங்கா அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க தேசிய ஆணைக்குழு – சிறிலங்கா அவசர அறிவிப்பு

சிறிலங்காவில் பரந்தளவில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மீது நடவடிக்கைகளை எடுப்பதற்காக தேசிய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு ஆறு மாத சேவை நீடிப்பு

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு, ஆறு மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த சேவை நீடிப்பை வழங்கியுள்ளார்.

நிறைவேற்றப்படாத ஜெனிவா வாக்குறுதிகள் – ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இன்று விவாதம்

சிறிலங்காவின் அனைத்துலக கடப்பாடுகள் என்ற தலைப்பிலான நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரவுள்ளது.

அபிவிருத்தி சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு – சபாநாயகர் அறிவிப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள, அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்துள்ளதாகவும், கிழக்கு மாகாணசபை இதற்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாகவும், சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அபுதாபி பாதுகாப்பு கண்காட்சியில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பிந்திய நவீன ஆயுத, தளபாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, அபுதாபியில் நடைபெறும் ஐடெக்ஸ்-2017 அனைத்துலக பாதுகாப்பு கண்காட்சியில், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பங்கேற்றுள்ளார்.

தவறிழைத்த படையினரே நீதிமன்றம் செல்ல நேரிடும் – சந்திரிகா

காணாமற்போனோர் தொடர்பான பணியகம், அமைக்கப்படுவது சிறிலங்கா படையினரை அனைவரையும், நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், தற்போது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் தனது திட்டங்களுக்கு கூட்டமைப்பை ஒத்துழைக்கக் கோருகிறது இந்தியா

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா முன்னெடுப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ். ஜெய்சங்கர் கோரியுள்ளார்.

வடக்கு- கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது – ஜெய்சங்கர் கைவிரிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர், கூட்டமைப்புடன் இந்திய வெளிவிவகாரச் செயலர் பேச்சு

மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இன்று சிறிலங்கா அதிபர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புகளுடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தினார்.