மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சுவிஸ் குமாரை விடுவித்த காவல்துறை உயர் அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான சந்தேகநபரை விடுவித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரிக்கு குற்றச்சாட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை பங்களாதேஷ் புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை பங்களாதேசுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

முல்லைத்தீவுக்கு அப்பால் ஆழ்கடலில் தத்தளித்த யானை – கடற்படையினரால் மீட்பு

முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாயில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த யானை ஒன்றை சிறிலங்கா கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

கூட்டமைப்பைச் சந்திப்பது மகிழ்ச்சி – அஸ்கிரிய பீட பதிவாளர்

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்திக்க எடுத்துள்ள முடிவைப் பாராட்டுவதாக, அஸ்கிரிய பீடத்தின் பதிவாளரும், அஸ்கிரிய சங்க சபாவின் மூத்த குழு உறுப்பினருமான வண. மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தலில் 30 வீதம் பெண் வேட்பாளர்களுக்கு இடமளிக்கும் சட்டத் திருத்தம்

மாகாணசபைகளில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவத்தை அளிக்கும் வகையிலான, மாகாணசபைகள் திருத்தச் சட்டமூலம், நேற்றுமுன்தினம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சி முறையோ, பௌத்தத்துக்கான முன்னுரிமையோ மாற்றப்படாது – சிறிலங்கா அதிபர்

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சித் தன்மையை மாற்றுவதற்கோ பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்குவதற்கோ எந்தவொரு சூழ்நிலையிலும் இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

3000 மில்லியன் ரூபா மோசடி – மகிந்தவுடன் இணைந்து விசாரணைக்கு வந்த தினேஸ்

முன்னைய ஆட்சிக்காலத்தில் குடிநீர் விநியோகத் திட்டத்தில் 3000 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, அப்போதைய நீர்வழங்கல், வடிகால் அமைப்பு அமைச்சரும்,  கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தனவிடம், நேற்று இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

தேங்காயை இறக்குமதி செய்யும் பரிதாப நிலையில் சிறிலங்கா

தேங்காய் கொள்கலன் ஒன்றை பரீட்சார்த்த அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு சிறிலங்காவின் பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியின் எதிர்ப்பை சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்கா கடற்பரப்பில் அடிமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறையைத் தடைசெய்யும் நாடாளுமன்றத் தீர்மானத்துக்கு, தமிழ்நாடு அரசாங்கம் தெரிவித்துள்ள எதிர்ப்பை, சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நீக்கப்படாது – சிறிலங்கா பிரதமர்

தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக, புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்கப் போவதில்லை என்று பௌத்த பீடங்களுக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.