மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொண்ட பாகிஸ்தான்

கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளுடன், பாகிஸ்தான் பாதுகாப்பு உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குராம் டஸ்ட்கிர் கான் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

2015ஆம் ஆண்டு ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தின்  இலக்குகளை நிறைவேற்றுமாறு சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

பணியகத்துக்கு நம்பகமான ஆணையாளர்களை நியமிக்க வேண்டும் – மேற்குலக நாடுகள்

காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள மேற்குலக நாடுகள், இந்தப் பணியகத்துக்கு நம்பகமான ஆணையாளர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

ஜனவரி 20க்குப் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் – மகிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சித் தேர்தல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாளுக்குப் பின்னரே நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்காவின் தேர்தல்கள்ஆணைக்குழு  தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரி்வித்தார்.

பிரதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அருந்திக பெர்னான்டோ

சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அருந்திக பெர்னான்டோவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்துள்ளார்.

தமிழ் மக்களை சிறிலங்கா அரசு நம்பவில்லை – விக்னேஸ்வரன்

வடக்கில் இராணுவத் தளங்களை மூடுவதற்கு மறுப்பதானது, தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் நம்பவில்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது  என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைப் படுகொலைகள் – கோத்தா, ஜெனரல் ஜெயசூரியவிடம் நாளை விசாரணை

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு கிழக்கு, மேல் மாகாணசபைகள் அங்கீகாரம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவுக்கு, கிழக்கு மாகாணசபையும், மேல் மாகாணசபையும் இன்று அங்கீகாரம் அளித்துள்ளன.

படையினர் எவரும் போர்க்குற்றம் புரியவில்லை – என்கிறார் சிறிலங்கா அமைச்சர்

முப்படைகள், காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எவருமே, எந்தவொரு போர்க்குற்றங்களையும் இழைக்கவில்லை என்று சிறிலங்காவின்  வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ண முடிவு

அடுத்த உள்ளூராட்சித் தேர்தலின் போது, வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.