அனுராதபுரவில் இன்று பரப்புரையை ஆரம்பிக்கிறார் கோத்தா
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரையை இன்று அனுராதபுரவில் ஆரம்பிக்கவுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரையை இன்று அனுராதபுரவில் ஆரம்பிக்கவுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால், ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இம்முறை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி, எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என இன்று முடிவை அறிவிக்கவுள்ளது.
அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவு செய்திருப்பதை அடுத்து, கட்சி மூன்றாக பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு பதில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான கடைசி வாய்ப்பு இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.
சமல் ராஜபக்ச மாற்று ஏற்பாடாகத் தான் தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியிருந்தார் என, பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இம்முறை அதிபர் தேர்தலில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்குவதால், வாக்களிப்பு நிலையங்களில் இடவசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் தாம் கடுமையான நெருக்கடிகளை சந்திக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் விசாரணை இன்று காலை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.