ஐதேக மாநாட்டு நேரலை ஒளிபரப்பை நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய சம்மேளனக் கூட்டம் தொடர்பான தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பை சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய சம்மேளனக் கூட்டம் தொடர்பான தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பை சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐதேக குழுவினர் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தே கலந்துரையாடினர் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் சனிக்கிழமை பொதுவிடுமுறை என்பதால், அதிபர் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள், ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று பின்னிரவு, முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
வரும் அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து, சனிக்கிழமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டு தொடர்பான எந்த முடிவையும் எடுக்காமல், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையிலான மோதல்களில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஈடுபாட்டினால், சிறிலங்காவின் இறைமை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னம் மாற்றப்படாது என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கத் தயார் என்ற போதும், மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு ஆதரவு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் அளிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.