கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திடீர் அவசர பயணமாக சற்று முன்னர் கொழும்பு வந்தடைந்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியேயா வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு வழங்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் விலகிக் கொள்வார் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவரும், அவை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினரும் இந்த வெற்றியின் பங்குதாரர்களாக வேண்டும் என அழைத்தேன். ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று சிறிலங்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்று மாலை அவரைச் சந்தித்தார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 52.25 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச சுமார் 69 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் 11 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஜித் பிரேமதாச 84 வீதமான – 312,722 வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.