யாழ். மாவட்டத்தில் 84 வீத வாக்குகளை அள்ளிய சஜித் – இறுதி முடிவு
யாழ்ப்பாண மாவட்டத்தின் 11 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஜித் பிரேமதாச 84 வீதமான – 312,722 வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் 11 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஜித் பிரேமதாச 84 வீதமான – 312,722 வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்பாராத வகையில் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றிருக்கிறார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 49 வீத வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலின், மாவட்ட தேர்தல் தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களின் தொகுதிகளை சஜித் பிரேமதாசவும், தெற்கிலுள்ள தொகுதிகளை கோத்தாபய ராஜபக்சவும் கைப்பற்றி வருகின்றனர். .
சிறிலங்கா அதிபர் தேர்தலில் அஞ்சல் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள் தற்போது அதிகாரபூர்வமாக வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் சஜித் பிரேமதாசவும், ஏனைய பகுதிகளில் கோத்தாபய ராஜபக்சவும் முன்னிலை பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான முதலாவது பயணிகள் விமான சேவை நேற்று ஆரம்பமாகியது.
அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள மூன்றாவது காலாண்டுக்குரிய, குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறாதது, ராஜபக்சவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் தேர்தலுக்கு இன்னமும், 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அண்டை நாடான சிறிலங்காவின் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளியாகும் எகொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து விரைவில் விமான சேவைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.