மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு ரணிலுக்கு ஆலோசனை

பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

விக்னேஸ்வரன்- கஜேந்திரன் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தோல்வி

புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கும் நோக்கில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்படவிருந்த பேச்சுக்கள் ரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் யாழ்ப்பாணம், மயிலிட்டிப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தியது குறித்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பலாலியில் இருந்து விமான சேவை – புறக்கணிக்கப்படும் தமிழக விமான நிலையங்கள்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் பலாலி விமான நிலையத்தில் இருந்து, முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளில், தமிழ்நாட்டில் உள்ள எந்த விமான நிலையமும் இடம்பெறவில்லை எனத் தெரியவருகிறது.

உபாலி தென்னக்கோன் தாக்குதல் – கைரேகையால் மாட்டினார் இராணுவ அதிகாரி லலித் ராஜபக்ச

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய  முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளார் என, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி – நாளை மறுநாள் ஆரம்பம்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை மறுநாள், ஆரம்பிக்கப்படவுள்ளன.

தூக்கிலிடும் உத்தரவும் இல்லை – தூக்கில் போடுபவரும் தெரிவாகவில்லை

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது தொடர்பான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு இன்னமும் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவிடம் உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்ய சிறிலங்கா விருப்பம்

ரஷ்ய தயாரிப்பு உலங்குவானூர்திகளை சிறிலங்கா கொள்வனவு செய்யும் சாத்தியங்கள் உள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை

போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரை தூக்கிடுவதற்கான ஆணையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு – சிறிலங்கா அதிபர் முட்டுக்கட்டை

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான உடன்பாடு, நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், அதன் ஒவ்வொரு பிரிவும் கவனமாக ஆராயப்பட வேண்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.