மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

கிளிநொச்சியில் தொடருந்து மோதி 6 சிறிலங்கா படையினர் பலி

கிளிநொச்சியில் இன்று பிற்பகல்  சிறிலங்கா இராணுவ வாகனம் ஒன்றின் மீது, யாழ்தேவி தொடருந்து மோதியதில், 6 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இலங்கைத் தீவின் 90 வீதமான பவளப் பாறைகள் அழிந்து விட்டன

இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள 90 வீதமான பவளப் பாறைகள் இப்போது அழிந்து விட்டதாக, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரேனி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

கைவிடப்பட்டது கல்முனை உண்ணாவிரதப் போராட்டம் – முஸ்லிம்களின் போராட்டமும் நிறைவு

கல்முனை வடக்கு தமிழ்  பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கடந்த திங்கட்கிழமை காலையில் இருந்து நடத்தப்பட்டு வந்த  உண்ணாவிரத போராட்டம்  இன்று முற்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழித்தால் தான் நாட்டுக்கு விமோசனம் – மைத்திரி

சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, அரசியலமைப்பின் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கல்முனையில் ஒருவரின் உண்ணாவிரதம் தொடர்கிறது- களத்தில் ஞானசார தேரர்

கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர் தவிர்ந்த ஏனையோர், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரின் வாக்குறுதியை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

கல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் முன்னெடுக்கப்பட்டு வரும், உண்ணாவிரதப் போராட்டமும், அதற்கு ஆதரவான போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன.

புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’

தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

‘சோபா’வின் சர்ச்சைக்குரிய பிரிவுகள் குறித்து பொம்பியோவுடன் பேச திட்டம்

அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா உடன்பாட்டின் சர்ச்சைக்குரிய பிரிவுகள் தொடர்பாக, கொழும்பு வரும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவுடன் பேச்சு நடத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பொதுவாக்கெடுப்புக்கு தயாராகும் சிறிசேன – முதலில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முயற்சி

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு மக்களின் அனுமதியைக் கோரும் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிரவாத முறியடிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்க செயலருடன் பேசவுள்ள சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவுக்கு வரவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவுடன், தீவிரவாத முறியடிப்பு, இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.