மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

ஜேர்மனியில் புலிகள் இயக்க உறுப்பினர் மீது பாயும் கதிர்காமர் கொலை வழக்கு

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்வதற்கு உதவினார் என, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனி காவல்துறையினர், வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

கோத்தாவை அறிவிக்குமாறு மகிந்தவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை அறிவிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன என, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐதேக வேட்பாளராக சஜித் – நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிவு

வரும் அதிபர் தேர்தலில் ஐதேக வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தும் யோசனையை  ஐ.தேக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பலரும் நேற்று முன்மொழிந்துள்ளனர்.

நீர்கொழும்பு தேவாலயம் மீளத் திறப்பு – வரலாற்று சின்னமாக இரத்தக்கறையுடன் அந்தோனியார்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம்- மூன்று மாதங்களுக்குப் பின்னர் நேற்று மீளத் திறக்கப்பட்டது.

அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்

சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள அமெரிக்க உடன்பாடுகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று முன்தினம், முகநூல் ஊடாக நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு.

நாளை சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டு நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு ஆயுதங்களை விற்ற சிறிலங்கா கடற்படை அதிகாரிகள்? – விசாரணைக்கு உத்தரவு

சிறிலங்கா கடற்படையின் ஆயுதங்கள் வெளிநாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

பலாலியில் இருந்து திருச்சி அல்லது மதுரைக்கு விமான சேவை – இந்தியா ஆர்வம்

பலாலி விமான நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் மதுரை அல்லது திருச்சி நகரங்களுக்கு அல்லது கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு நேரடி விமான சேவைகளை நடத்த இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற விளக்கத்தைக் கோரும் முடிவைக் கைவிட்டார் மைத்திரி

தனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

27 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர், 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.