மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

யாழ்ப்பாண விமான நிலையம் உள்நுழைவு, புறப்படுகைத் தளமாக பிரகடனம்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்மலானை அனைத்துலக விமான நிலையங்களை, குடிவரவு, குடியகல்வுச் சட்டங்களின் கீழ், புறப்படுகை மற்றும் உள்நுழைவுக்கான புதிய தளங்களாக, சிறிலங்கா அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் புறப்பட்டது முதல் விமானம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல் விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளது.

கோத்தா, மகிந்தவுடன் சுமந்திரன் நடத்திய பேச்சு தோல்வி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தலில் இம்முறை அனைத்துலக தலையீடு இருக்காது – பசில்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இம்முறை எந்தவொரு அனைத்துலக சக்தியும் தலையீடு செய்ய முயற்சிக்காது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு முதலில் பகலில் மட்டும் விமான சேவை

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் அனைத்துலக தரத்திற்கு இணங்க, அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டிருக்கும் என்று சிறிலங்கா சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண விமான நிலைய திறப்பு விழா – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழாவை அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்களை அடைவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

பலாலி ஓடுபாதையை ஆய்வு செய்ய வருகிறது இந்திய நிபுணர் குழு

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதையை பரிசீலனை செய்து, இந்திய அரசாங்கத்துக்கு இறுதி அறிக்கையைக் கொடுப்பதற்காக, இந்திய நிபுணர்கள் குழுவொன்று நாளை மறுநாள் பலாலிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை வரும் 17ஆம் நாள் ஆரம்பித்து வைப்பதற்கான அனைத்து கள வேலைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின்  பணிப்பாளர் நாயகம் எச்எம்சி நிமலசிறி தெரிவித்துள்ளார்.

வியாழன்று பலாலியில் பரீட்சார்த்த விமானத்தை தரையிறக்குகிறது அலையன்ஸ் எயர்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கு  வரும் வியாழக்கிழமை சென்னையில் இருந்து பரீட்சார்த்த விமானப் பறப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது

எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.