மேலும்

செய்தியாளர்: புதினப்பணிமனை

இரண்டாம் முள்ளிவாய்க்கால்

இந்தத் தொடர் எவரையும் எந்த அமைப்பையும்  நியாயப்படுத்துவதற்கோ எவர் மீதும் எந்த அமைப்பின் மீதும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுவதற்கோ எழுதப்படுவதல்ல. இது முள்ளிவாய்க்காலின் பின்னரான பின்போர் சூழலில் நடந்துவரும் பிழைப்பவாத அரசியலை  கட்டுடைப்பதை நோக்கமாகக் கொண்டது.

புத்தாண்டுக்கு – புத்தகக் கொண்டாட்டம் தேவையா?

“ பெரிய கொண்டாடத்துக்கு தயாராக இருக்கின்றன தமிழகம் முழுவதும் புத்தகக் கடைகள். இன்று 31-1-2015 நள்ளிரவிலும் கடைகளைத் திறந்துவைத்துக் காத்திருப்பார்கள் புத்தகக் கடைக்காரர்கள். 10 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரையில் தள்ளுபடி அறிவித்திருக்கிறார்கள் பதிப்பாளர்கள். எல்லாம் வரலாற்றில் முதல்முறை எல்லாம் உங்களுக்காக “

கனவு மெய்ப்பட வேண்டும்…!

2016 எனும், புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். புதினப்பலகை நிறுவக ஆசிரியர் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் இழப்பு உள்ளிட்ட சோகங்கள், தமிழர் தாயகத்திலும்  தமிழ்நாட்டிலும் ஏற்பட்ட   பெரு வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், அரசியல் திருப்பங்கள், வரலாற்றுப் பாடங்கள் என பலவற்றைத்தந்த 2015ஆம் ஆண்டு நேற்றுடன் விடை பெற்றிருக்கிறது.

வேதனை வடியவில்லை வேண்டுமா புத்தாண்டு ?

வெள்ளம் வடிந்தும் வேதனை வடியவில்லை. வெள்ளம் விட்டுச் சென்ற தீப்புண்கள் ஆற தலைமுறைகள் ஆகலாம். சுனாமியின் வடுக்கள் கடலோர மக்களின் மனசில் இன்னும் பச்சைக்காயமாய் நின்று கொண்டிருக்கிறது ; நீரில் மூழ்கிய வாழ்விலிருந்து மீண்டுஎழ ஒரு தலைமுறையோ, இரு தலைமுறையோ எத்தனை காலம் எடுக்குமெனச் சொல்ல முடியாது. – தமிழ்நாட்டில் இருந்து புதினப்பலகைக்காக பா.செயப்பிரகாசம்.

2016 சுவிஸ் அரசியல்சட்டவரம்பும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பும் – ஓர்பார்வை

ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியிருக்கும் வெளிநாட்டவர்கள் குற்றச்செயல்களிலும் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் புதியசட்டம் ஒன்றுக்கான முன்மொழிவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

கைகொடுக்கத் தயங்குவது நியாயமா?

சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கொட்டித் தீர்த்த பெருமழையும், அதனால் ஏற்பட்ட வரலாறு காணா வெள்ளமும், ஏராளமானோரின் இதயங்களில் புதைந்திருந்த மனிதநேயத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

பேரம் பேசும் பலம் கூட்டமைப்புக்கு உள்ளதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பேரம் பேசும் பலத்தைக் கொடுங்கள், அதனைக் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.

அற,அறிவு வலிமைகளை அரசியல் வலிமையாக மாற்றுவோம் – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

மலரும் 2016 ஆம் ஆண்டு, சுதந்திரவேட்கையின் குறியீடாக சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான அரசியல் அமைப்பினை நாம் உலகத் தமிழ் மக்களை இணைத்த வண்ணம் எழுதுவதற்குத் தீர்மானித்துள்ளோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். 

தாய்த் தமிழக உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டுவோம் – சிவராம் ஞாபகார்த்த மன்றம்

இன்று தாய்த் தமிழக உறவுகள் துயரத்தில் இருக்கும் போது நாம் நேசக்கரம் நீட்டத் தவறுவோமேயானால் பிரித்தாளும் தந்திரத்தை உபயோகித்து எம்மை நிரந்தரமாகவே பிரித்துவிட முயலலாம்.  அதற்கு இடங்கொடாது எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தக் கொள்ள வேண்டும்.

கூட்டமைப்பைப் பிளவுபடுத்த அரசதரப்பு சதியா? – சம்பந்தன் விளக்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வேற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாக அரசியல் தீர்வினை தவிர்த்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள எவரேனும் முயற்சிக்கலாம். இதற்கு நாங்கள் பலியாகக் கூடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.