மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சலாவ குண்டுச் சிதறல்களை மயானத்தில் புதைக்க ஏற்பாடு

சலாவ சிறிலங்கா இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் சிதறிக் கிடக்கும், குண்டுகளின் சிதறல்கள், அந்தப் பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் புதைக்கப்படவுள்ளதாக தொண்டர்படை தளபதி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக தெரிவித்துள்ளார்.

உன்னிப்பான கண்காணிப்பில் வியாங்கொட மத்திய ஆயுதக் களஞ்சியம்

கொஸ்கம – சலாவ இராணுவ ஆயுதக்கிடங்கில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து, வியாங்கொடவில் உள்ள மத்திய ஆயுத மற்றும் வெடிபொருள் களஞ்சியத்தின் தரத்தை சிறிலங்கா இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் நேற்று பரிசோதித்தனர்.

சலாவ முகாமில் பொசுங்கிப்போன ஆயிரம் கோடி ரூபா வெடிபொருட்கள்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் நேற்றுமுன்தினம் மாலை ஏற்பட்ட வெடிவிபத்தில், 1000 கோடி பெறுமதியான வெடிபொருட்கள் அழிந்து போனதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதி பதவி விலக வேண்டும் – கோத்தா

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்குப் பொறுப்பேற்று, சிறிலங்கா இராணுவத் தளபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கோரியுள்ளார்.

கொஸ்கமவில் பேரழிவை ஏற்படுத்திய ஆயுதக்கிடங்கு – ஒளிப்படங்கள்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் நேற்றுமாலை ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தினால், அந்தப் பிரதேசமெங்கும் பாதிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலையிலும் இரண்டு பாரிய குண்டுகள் வெடித்த சத்தங்கள் கேட்டன.

சலாவ ஆயுதக்கிடங்கில் இன்னமும் தொடரும் வெடிப்புகள்- பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்

சிறிலங்கா இராணுவத்தின் சலாவ முகாம் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இன்னமும் சிறியளவிலான வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு ஆயுதக் கிடங்குகள் நாசம் – வேவு விமானங்கள் மூலம் கண்காணிப்பு

கொழும்புக்குக் கிழக்காக, 36 கி.மீ தொலைவில் உள்ள கொஸ்கம- சலாவ சிறிலங்கா இராணுவ முகாமில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிவிபத்து சேதத்தை மதிப்பிட காலஅவகாசம் தேவை – பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு, காலஅவகாசம் தேவைப்படுவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

நாலாபுறமும் சீறிப் பாயும் ஆட்டிலறி, பல்குழல் குண்டுகள் – அச்சத்தில் சிதறி ஓடும் மக்கள்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இன்று மாலை ஏற்பட்ட வெடிவிபத்தையடுத்து, அங்குள்ள ஆட்டிலறி, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி குண்டுகள் நாலாபுறமும் வெடித்துச் சிதறிக் கொண்டிருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு 4 மாத சேவை நீடிப்பு வழங்க சிறிலங்கா அதிபர் முடிவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளை ஏற்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு, வரும் டிசெம்பர் மாதம் வரை- நான்கு மாதகால சேவை நீடிப்பு வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.