மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா கடற்படையினருக்கான ஈரூடக பயிற்சி – வாகரையில் தரையிறக்க ஒத்திகை

சிறிலங்கா கடற்படையின் தரையில் போரிடும் படைப்பிரிவுக்கான ஈரூடக நடவடிக்கை பயிற்சிநெறியின், இரண்டாவது தரையிறக்க பயிற்சி, மட்டக்களப்பு வாகரையில் நிறைவடைந்துள்ளது.

பொறுப்புக்கூறல் விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை – சிறிலங்கா அதிபர்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொறுப்புக்கூறும் விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் எமக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சலாவ வெடிவிபத்தினால் 500 கோடி ரூபாவுக்கு மேல் இழப்பு – சிறிலங்கா இராணுவத் தளபதி

கொஸ்கம-சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்தினால், சிறிலங்கா இராணுவத்துக்கு, 500 கோடி ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த வெடிபொருட்களே நாசம் – வலுக்கிறது சந்தேகம்

சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்த வெடிபொருட்களே சலாவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் நாசமாகியதாக, சிறிலங்கா இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி, சிங்கள ஊடகமான “ராவய” செய்தி வெளியிட்டுள்ளது.

மேலதிக வெடிபொருட்களை வெளிநாடுகளுக்கு விற்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு

சிறிலங்கா படைகளின் தேவைக்கு அதிகமாக உள்ள வெடிபொருட்களை விற்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல இரத்நாயக்க தெரிவித்தார்.

வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்கா நிராகரித்தது குறித்து அமெரிக்க காங்கிரஸ் ஏமாற்றம்

போர் தொடர்பாக பொறுப்புக்கூறும் உள்ளகப் பொறிமுறையில்,  வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், மறுப்புத் தெரிவித்திருப்பது குறித்து, அமெரிக்க காங்கிரசின் வெளியுறவுக் குழு ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.

சலாவ வெடிவிபத்து- புலிகளுக்கு தொடர்பிருப்பதாக கண்டறியப்படவில்லை

கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த சான்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என்று, சிறிலங்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெடிவிபத்து குறித்து நான்கு பக்க விசாரணை – ஓரம்கட்டப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு

கொஸ்கம – சலாவ இராணுவ ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பாக, நான்கு தரப்புகளால் சமாந்தரமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

பூகோள அமைதிச் சுட்டி – 18 இடங்கள் முன்னேறியது சிறிலங்கா

பூகோள அமைதிச் சுட்டியில், சிறிலங்கா ஒரே ஆண்டில் 18 இடங்கள் முன்னேறி, 97 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வரும், பூகோள அமைதிச் சுட்டி-2016 (Global Peace Index) என்ற தரவரிசைப் பட்டியலிலேயே சிறிலங்கா 97ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இராணுவக் குடும்பங்களுக்கான ரணவிருகம கிராமமே அழிந்தது – ஒளிப்படங்கள்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தினால், அதற்கு அருகில் இருந்த ரணவிருகம எனப்படும், சிறிலங்கா படையினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புத் தொகுதி முற்றாக அழிந்து போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.