மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

விரைவில் அனைத்துலக கொடையாளர் மாநாட்டுக்கு ஏற்பாடு

பேரிடர் மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க, அனைத்துலக கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் படையினர் சிறிலங்காவை விட்டுப் புறப்பட்டனர்

டிட்வா புயலை அடுத்து பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக சிறிலங்கா வந்த அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த  (INDOPACOM) படையினர் தங்கள் மனிதாபிமான உதவிப் பணியை முடித்துக் கொண்டு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அமெரிக்க மூலோபாய நலன்களின் மையப் புள்ளி சிறிலங்கா

சிறிலங்காவில், கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விரிவடையும் செல்வாக்கை எதிர்கொள்வதில் வொசிங்டன் கவனம் செலுத்தும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள, எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.

கடும் தண்டனைகளுடன் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின்  கீழ், இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்மட்டத் தலைவரை சிறிலங்காவுக்கு அனுப்புகிறது சீனா

பேரிடரால்  பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு சீனா உயர்மட்ட தலைவர் ஒருவரை அனுப்பி வைக்கவுள்ளது.

சிறிலங்காவுடன் வரிகள் குறித்து மீண்டும் பேச்சு – அமெரிக்கா பச்சைக்கொடி

சிறிலங்காவுடன் மீண்டும் வரிவிதிப்பு  தொடர்பான பேச்சுக்களை தொடங்குவதில் அமெரிக்கா கவனம் செலுத்தவுள்ளதாக  அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர், தெரிவித்துள்ளார்.

சந்திரிகா அரசின் பேச்சுக்குழுவில் இருந்த ராஜன் ஆசீர்வாதம் மரணம்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் நடத்திய பேச்சுக்களில், அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்த ராஜன் ஆசீர்வாதம் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்புகளை மீளமைக்க சீனாவிடம் உதவி கோரும் சிறிலங்கா

அண்மைய பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகள், பாலங்கள், தொடருந்து  உள்ளிட்ட, உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

சாரா ஜஸ்மின் மரணத்தை உறுதிப்படுத்த மீண்டும் மரபணுச் சோதனை?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களில் ஒருவரான சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி ராஜேந்திரன் உயிரிழந்து விட்டாரா என்பதை உறுதிப்படுத்த மற்றொரு மரபணுப் பரிசோதனை நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் அலிசன் ஹூக்கர்

சிறிலங்கா வந்துள்ள, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர்  கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.