மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

கோத்தா மீதான வழக்கு – சிறிலங்கா அதிபர் அதிருப்தி

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நாளை ஆரம்பம்

இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நாளை சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல், நாளை தொடக்கம் எதிர் வரும் 15ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

வடக்கின் வீதி வலையமைப்பை உருவாக்குவதற்கு இந்தியா உதவி

வடக்கின் பிரதான வீதி வலையமைப்பை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிதின் கட்கரியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தியுள்ளார்.

25 நாட்கள் சீனாவில் தங்கவுள்ள கோத்தா

சீனாவில் நடக்கும் பாதுகாப்புக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அங்கு, 25 நாட்கள் வரை தங்கியிருக்கலாம் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு ஆலோசகராக நிமால் லெகே

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு ஆலோசகராக, சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி நிமால் லெகே நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கிறது இந்தியா

நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் பீப்பாய் சுத்திகரிக்கும் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை திருகோணமலையில் இந்தியாவின் உதவியுடன் நிறுவவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அகதிகளை நாடு கடத்துவது குறித்து சுவிஸ் – சிறிலங்கா இடையே உடன்பாடு கைச்சாத்து

அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் நேற்று இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் சிறிலங்கா கடற்படைக்கு மற்றொரு அமெரிக்க போர்க்கப்பல்

சிறிலங்கா கடற்படைக்கு அடுத்த ஆண்டில் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று கிடைக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோனது

ஆபிரிக்க நாடான மாலியில் 1000 பேர் கொண்ட வலுவான பற்றாலியன் ஒன்றை, ஐ.நா அமைதிப்படை சார்பில் நிறுத்தும் வாய்ப்பை, சிறிலங்கா இராணுவம் இழந்துள்ளது.

கோத்தாவுக்கு சீனா அழைப்பு – நீதிமன்றத்தின் கையில் முடிவு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி அளிப்பதா என்பது குறித்து நீதிமன்றம் நாளை முடிவு செய்யவுள்ளது.