மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு முக்கிய பதவி

பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மட்டப் பதவியை ஒன்றை உருவாக்குவதில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சர்ச்சைகளில் சிக்கிய மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு

சிறிலங்கா இராணுவத்தின் ஒன்பது பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன அறிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையைக் கைப்பற்றுகிறது சீன நிறுவனம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமே அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குகள் கையளிக்கப்படவுள்ளன.

சிறிலங்கா அதிபருக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு

ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 2623 கோடி ரூபா இராணுவ உதவி, ஆழ்கடல் ரோந்துக் கப்பல் – சீனா இணக்கம்

சிறிலங்காவுக்கு சுமார் 2623 கோடி ரூபா (120 மில்லியன் யுவான்) பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கவும், ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்கவும் சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

சீன- சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்த இருநாடுகளின் தலைவர்களும் உறுதி

அணை மற்றும் சாலைக் கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில், இருதரப்பு நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்பை  மேலும் வலுப்படுத்துவதற்கு சீன, சிறிலங்கா தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவிடம் அவசர உதவி கோரிய அமெரிக்க நாசகாரி

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஹொப்பர் என்ற ஏவுகணை நாசகாரி கப்பல் சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழைந்து, சிறிலங்கா கடற்படையின் அவசர உதவியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன – சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் – விபரங்களை மறைக்கும் சிறிலங்கா

இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல், பீஜிங்கில் கடந்த 13ஆம் நாள் இடம்பெற்றதாக சீன இராணுவத் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லசந்த படுகொலை- மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் 6 மணிநேரம் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.