மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக ஓய்வு

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 28ஆம் நாள்) ஓய்வுபெற்றுள்ளார். இதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவி வெற்றிடமாகியுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஜ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா குறித்த நிலைப்பாட்டை ஜெனிவாவில் இன்று வெளிப்படுத்துமா அமெரிக்கா?

சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு இன்று ஜெனிவாவில் வெளிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க மரைன் படைப்பிரிவு பிரதி தளபதி சிறிலங்காவில் – உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் மரைன் படைப்பிரிவின் பிரதிக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் பிரையன் கவனோ, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

“இதயத்தில் இடம்பிடித்த நாடு சிறிலங்கா” – மங்களவிடம் மனம் திறந்த ஐ.நா பொதுச்செயலர்

ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பயிற்சியை முடித்து வெளியேறியது சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவு

சிறிலங்கா கடற்படையின் முதலாவது மரைன் படைப்பிரிவு பற்றாலியன், பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  சிறிலங்கா கடற்படையின் மரைன் படையணியின் அணிவகுப்பை பார்வையிட்டு, அவர்களுக்கான சின்னங்களை இன்று அணிவித்தார்.

சிறிலங்கா குறித்த தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை இம்முறையும் அமெரிக்காவே ஏனைய இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து முன்வைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுடனான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகளில் இந்தியாவுக்கு ஆர்வமில்லை

சிறிலங்காவுடன் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகளைச் செய்து கொள்வதை விட, கூட்டு முயற்சி உடன்பாடுகளைச் செய்து கொள்வதிலேயே இந்தியா ஆர்வம் காட்டுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் காலஅவகாசத்துடன் நிதி உதவியையும் கோரவுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் 24 மாத கால அவகாசத்தையும், நிதி உதவியையும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா எம்மை நம்பவில்லை – கோத்தா

மேற்குலகின் தலையீடுகளால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை இந்தியா நம்பவில்லை என்றும், மகிந்த அரசுக்கு எதிராகச் செயற்பட முடிவு செய்தது என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.