மேலும்

செய்தியாளர்: நெறியாளர்

மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார்

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவியும், 1960களில் நடந்த சத்தியாக்கிரக போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்களில் ஒருவருமான மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் (வயது 82) நேற்றுமாலை லண்டனில் காலமானார்.

உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு தமிழ் அரசியல் கைதிகளிடம் கூட்டமைப்பு கோரிக்கை

மகசின் சிறைச்சாலையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக  தமது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

விசாரணைகளில் நம்பகத்தன்மையையே ஐ.நா விரும்புகிறது – பர்ஹான் ஹக்

போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மையான விசாரணைகளின் மூலம், சிறிலங்கா அரசாங்கம்  நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதையே ஐ.நா விரும்புவதாக ஐ.நா. பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் கோட்டைக்குள் நுழைகிறார் மைத்திரி

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் கோட்டையாக கடந்த ஒரு ஆண்டு காலமாக விளங்கி வந்த நாரஹேன்பிட்டிய அபயராமய விகாரைக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார்.

வதைமுகாம் இரகசியங்கள்

யாழ்ப்பாணத்தில், இராணுவத்தினரின் பிடியில் இருந்து புதிதாக விடுவிக்கப்பட்ட 701 ஏக்கர் பரப்பளவு பிரதேசத்தில் உள்ள வீமன்காமம் பகுதியில், இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதைமுகாம்களுக்குரிய தடயங்கள் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளன.

ஏனைய தமிழ்க் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் – பொதுமன்னிப்பில் விடுதலையான ஜெனிபன்

தனக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது போல, மற்றைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார் அண்மையில் விடுதலையான சிவராசா ஜெனிபன்.

வரலாற்றில் இன்று: தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்

யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான, 1974 ஜனவரி 10 அன்று, மாநாட்டில் கலந்து கொண்ட 11 தமிழர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட நாள் இன்று.

புத்தாண்டில் ஈழத்தமிழ் மக்களது உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் – வி.உருத்திரகுமாரன்

உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் மறக்கமுடியாத சிறப்பான ஆண்டாக மாற்ற வேண்டும் – இரா.சம்பந்தன் வாழ்த்து

தேசியப் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள  தீர்வை எட்டுவது, நிலையான சமாதானத்தையும், புரிந்துணர்வையும் நிலைநாட்டுவது உள்ளிட்ட இமாலய  முயற்சிகளில் வெற்றிபெறுவதற்கு புத்தாண்டில், நாட்டின் அனைத்துக் குடிமக்களும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்  தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வை எட்டும் சந்தர்ப்பத்தைக் குழப்பக் கூடாது – இரா. சம்பந்தன்

அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு ஏற்ற சந்தர்ப்பம் உருவாக்கியிருக்கும் சூழலில் அதனைக் குழப்ப எவரும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது  வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.