யாழ்ப்பாணத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் – பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்பு
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டதுடன், போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டதுடன், போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் உள்ள நாக விகாரைக்குச் சென்று நேற்று வழிபாடு நடத்தினார்.
வடக்கு மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார இந்த மாத இறுதியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுவதற்கு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி, இலங்கையில் 10 இலட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் முயற்சியில் முருகனின் தாயார் வெற்றிவேல் சோமணி ஈடுபட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு காணும் வகையில், அதிகாரப் பகிர்வு யோசனை ஒன்றை தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்டுள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை வெளியிட்டார்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்புறம் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் யாழ். கல்விச் சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக வடக்கு மாகாணசபையின் சார்பில் யோசனையை முன்வைப்பதற்கு மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்தக் குழு பற்றிய விபரங்களை அறிவித்துள்ளார்.
அனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் கருத்துக்களை உள்வாங்கியே, அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கில் இருந்து சிறிலங்கா படையினர் படிப்படியாக குறைக்கப்படுவர் என்றும், காலாவதியாகிப் போயுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.