வித்தியா கொலை வழக்கில் செப்ரெம்பர் 27ஆம் நாள் தீர்ப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் நாள் வழங்கப்படும் என்று யாழ். மேல் நீதிமன்றத்தின் சிறப்பு தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் நாள் வழங்கப்படும் என்று யாழ். மேல் நீதிமன்றத்தின் சிறப்பு தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை வடக்கு மாகாணசபை இன்று நிராகரித்துள்ளது. இன்று நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்வில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
ஈழத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது.
20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு தொடர்பாக அதில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர், முடிவெடுப்பது என்று வடக்கு மாகாணசபை இன்று தீர்மானித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இறுதிப் போரில் குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரன், தாக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணக் கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுத்தீவு பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற படகு விபத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவுக்கு, வடக்கு மாகாணசபை ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்களாக மருத்துவ கலாநிதி ஜி.குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் இன்று பிற்பகல் பதவியேற்றனர்.
வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்களாக, மருத்துவ கலாநிதி ஜி.குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.