மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

மனுவை மீளப்பெற்றாலே அரசியல் கொந்தளிப்பு அடங்கும் – மதத்தலைவர்களிடம் விக்கி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்க மற்றும் இந்து மதத் தலைவர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

வடக்கு அரசியல் குழப்பத்தை தீர்க்கும் முயற்சிகளில் தேக்கம்

வடக்கு மாகாண அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

கறுப்பாடுகளை அடக்க சிறிலங்கா இராணுவத்தை அழைக்க நேரிடும் – எச்சரிக்கிறார் விக்கி

கறுப்பாடுகள் எங்காவது தகாத முறையில் நடந்து கொள்வார்களால், காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் அழைக்கக் கூடிய நிலைமை ஏற்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நல்லூரில் பேரணி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பேரணி மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

வடக்கு அரசியல் குழப்பம் தீரவில்லை – இன்று காலையும் சமரசப் பேச்சு

வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை என்றும், இன்று காலையும் இதுதொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வருக்கு ஆதரவாக 15 பேர் கையொப்பம் – ஆளுனரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைவிடச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மீது நம்பிக்கை தெரிவித்து 15 உறுப்பினர்கள் நேற்று ஆளுனரிடம் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

சம்பந்தன் – விக்கி பேச்சில் இணக்கம்? : நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படலாம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் தமிழ் அரசுக் கட்சி கைவிடுவதற்கும், இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப எடுத்த முடிவை  முதலமைச்சர் விலக்கிக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு அமைச்சர்களை பதவி விலகவும், இருவரை விடுமுறையில் செல்லவும் முதலமைச்சர் உத்தரவு

வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராசாவையும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனையும், நாளை மதியத்துக்குள் பதவியில் இருந்து விலகுமாறு கோரியுள்ள முதலமைச்சர், ஏனைய இரண்டு அமைச்சர்களையும் விடுமுறையில் செல்லப் பணித்துள்ளார்.